CEO பணியிடை நீக்கம் - ரத்து செய்ய ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 18, 2022

CEO பணியிடை நீக்கம் - ரத்து செய்ய ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

 

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வேண்டுகோள்

~~~~~


10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத தயார் செய்யும் பொருட்டு அவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்து பிப்ரவரி 9ம் தேதி முதல் நாளை முடிவடைகிறது அதாவது நகர்புற உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பு கடந்த 10ம் தேதி என்பதால் அன்று நடைபெறுவதாக இருந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு நாளை (17.02.2022) நடைபெறுகிறது , இந்நிலையில் 10ம் தேதி நடைபெறும் என அறிவித்த திருப்புதல் தேர்வு வினாத்தாள் அன்றே வெளியான நிலையில் மற்ற பாடத.திற்கான வினாத்தாள்களும் முந்தின நாளே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, வினாத்தாள் எங்கு வெளியானது என விசாரனை செய்த போது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் போளூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் வெளியானதாக தெரியவந்தது, இது முழுக்க முழுக்க தனியார் பள்ளியின் தவறாகும் , இந்த நிலையில் தான் தனியார் பள்ளிகள் மாணவர்களை தயார் படுத்துகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது , முற்றிலும் தனியார் பள்ளியின் தவறே ஆதலால் வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்கா வண்ணம் அந்தப்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் , 




மேலும் தனியார் பள்ளியில் தவறுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை பொறுப்பாக்கக் கூடாது, அவர்மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் அதே மாவட்டத்தில் பணியமர்த்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்


சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு






Post Top Ad