10ம் வகுப்பு தேர்வு, பள்ளிகள் திறப்பு: முதல்வர் இன்று முடிவு - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, June 9, 2020

10ம் வகுப்பு தேர்வு, பள்ளிகள் திறப்பு: முதல்வர் இன்று முடிவுபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., இன்று(ஜூன் 9) ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும், 15ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்து வருகிறது. நோய் பரவல் உள்ள நிலையில், தேர்வு நடத்தக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, வரும், 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இன்று பகல், 12:00 மணிக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இரு துறை உயர் அதிகாரிகளுடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.இக்கூட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு வழக்கு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும், முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

Recommend For You

Post Top Ad