காப்பீடு, மருத்துவ பாதுகாப்பு, கடன் என அனைத்தையும் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஊதிய வங்கி கணக்கில் இருந்து பெறலாம்
மத்திய அரசு ஊழி யரா நீங்கள்? ஊதியம் பெறும் வங்கி கணக் கில், மாதந்தோறும் ஊதியத்தை பெறுவது மட்டுமின்றி; மேலும் பல புதிய சலுகை களையும் விரைவில் பெற வாய்ப்புள்ளது. மத்திய நிதியமைச்ச கத்தின் கீழ் உள்ள நிதி சேவைகள் துறை, பொதுத் துறை வங்கிகளுடன் இணைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு ! குரூப் ஏ, பி அண்டு சி) ஊதிய கணக்கில் காப்பீடு, கார் டுகள், வங்கி சேவைகள் கிடைக்கச் செய்ய, 'ஒருங் கிணைந்த ஊதிய கணக்கு தொகுப்பு' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. -
பொதுத்துறை வங்கி கள், காப்பீடு நிறுவனங் கள், நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆகியவற் றுடன் ஆலோசித்து, இந்த வசதியை நிதி சேவைகள் துறை செயலர் நாகராஜு அறிவித்துள்ளார். வஊதியம் பெறும் வங்கி கணக்கில்அனைத்து நிதி சேவைக னையும் ஒருங்கிணைத்து வழங்குவது. திட்டத்தின் நோக்கம். காப்பீடு, மருத்துவப் பாதுகாப்பு, கடன் பெறு தல் ஆகியவற்றை மத்திய அரசு ஊழியர்கள் தனித் தனியே பெறுவதை இது தவிர்க்கும். அனைத்து நிதி சேவைகளையும் ஊதிய வங்கி கணக்கில் இருந்து எளிதாக பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய ஒருங்கி ணைந்த ஊதிய கணக்கு தொகுப்பு குறித்த விபரங் களை, பொதுத்துறை வங் கிகள் தங்கள் இணையத வங்களில் விரிவாக வெளி யிடவும், மத்திய அரசு அலுவலகங்களில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் நிதி சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஊழியர்களின் சம்மதத்துடன், தற்போது உள்ளஊதிய கணக்குகளை இந்த புதிய தொகுப்புக்கு மாற்றுவதற்கான நடவடிக் கைகளையும் வங்கிகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா பொதுத்துறை வங்கிகளிலும் ஒரே மாதி ரியான சலுகை தொகுப்பு அவசியம் என்பதால், எந்த வங்கியில் ஊதிய கணக்கு வைத்திருந்தாலும் பயன் கிடைக்கும். முக்கிய அம்சங்கள்
வங்கி
ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு
* யூ.பி.ஐ., / நெப்ட் / ஆர்.டி.ஜி.எஸ்.. / ஐ.எம்.பி.எஸ்.. /காசோலை பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை
வீடு, வாகன, தனிநபர் கடனுக்கு வட்டி சலுகை * குறைவான செயல்பாட்டு கட்டணம் லாக்கர் வாடகையில் சலுகை
* குடும்பத்தினருக்கும் வங்கி வசதிகள் குறைந்த பிரீமியத்தில் காப்பீடு
தனிநபர் விபத்து காப்பீடு: அதிகபட்சம் ரூ.1.5 கோடி வரை
விமான விபத்து காப்பீடு: அதிகபட்சம் ரூ.2 கோடி வரை முழு/பகுதி மாற்றுத்திறனாளி காப்பீடு: ரூ.1.5 கோடி வரை ஆயுள் காப்பீடு ரூ.20 லட்சம் வரை டாப் அப் வசதியுடன் மருத்துவ காப்பீடு
டெபிட்/ கிரெடிட் கார்டு விமான நிலைய லவுஞ்ச் பயன்பாடு ரிவார்டு திட்டங்கள் கேஷ்பேக் சலுகைகள் பராமரிப்பு கட்டணம் இல்லை
கட்டணமின்றி, வரம்பில்லா பரிவர்த்தனைகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிதி சேவைகள் துறை (DFS) ஒரு புதிய 'ஒருங்கிணைந்த சம்பளக் கணக்கு தொகுப்பை' அறிமுகப்படுத்தியுள்ளது, இது பூஜ்ஜிய இருப்பு கணக்கு, ₹2 கோடி வரை காப்பீடு, விமான நிலைய ஓய்வறை அணுகல், கடன்களில் சலுகை வட்டி போன்ற பல சலுகைகளுடன், வங்கிகள், காப்பீடு மற்றும் கார்டு பலன்களை ஒரே கணக்கின் கீழ் கொண்டுவருகிறது. இந்த திட்டம் நிதி நிர்வாகத்தை எளிதாக்கவும், ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டது. முக்கிய அம்சங்கள்:
பூஜ்ஜிய இருப்பு கணக்கு: குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கத் தேவையில்லை.
விரிவான காப்பீடு: ரூ. 2 கோடி வரை விபத்து காப்பீடு (Air Accident Insurance), நிரந்தர இயலாமைக்கான காப்பீடு மற்றும் பிற கூடுதல் காப்பீடுகள்.
சிறப்பு கார்டுகள்: வருமானத்திற்கு ஏற்ப இலவச RuPay பிளாட்டினம் அல்லது சர்வதேச டெபிட் கார்டுகள்.
கடன் சலுகைகள்: கடன்களுக்கு குறைந்த வட்டியில் சலுகை (Concessional interest rates).
கூடுதல் வசதிகள்: விமான நிலைய ஓய்வறை அணுகல் (Airport lounge access), இலவச NEFT/RTGS/UPI பரிமாற்றங்கள் மற்றும் பல.
நோக்கம்:
மத்திய அரசு ஊழியர்களுக்கான வங்கி, காப்பீடு மற்றும் டிஜிட்டல் சேவைகளை ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவது.
நிதி நிர்வாகத்தை எளிமையாகவும், வசதியாகவும் மாற்றுவது.
'அனைவருக்கும் காப்பீடு 2047' என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்தது.
இந்தத் திட்டத்தைப் பற்றி மேலும் அறிய, அரசு ஊழியர்கள் பொதுத்துறை வங்கிகளின் இணையதளங்களைப் பார்வையிடலாம் அல்லது சிறப்பு விழிப்புணர்வு முகாம்களில் கலந்துகொள்ளலாம்.


No comments:
Post a Comment