ஆசிரியர், அரசு ஊழியர்கள் நெஞ்சில் என்றும் நிலை கொண்டுள்ளார் முதல்வர் - ஜாக்டோ-ஜியோ பாராட்டு - Asiriyar.Net

Monday, January 12, 2026

ஆசிரியர், அரசு ஊழியர்கள் நெஞ்சில் என்றும் நிலை கொண்டுள்ளார் முதல்வர் - ஜாக்டோ-ஜியோ பாராட்டு

 




ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் தாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில் முதல்வர் அறிவித்தார். ஆசிரியர், அரசு ஊழியர்கள் நெஞ்சில் என்றும் நிலை கொண்டு விட்ட தமிழ்நாடு முதல்வருக்கு ஜாக்டோ -ஜியோ சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த அரசாணையில் 50 விழுக்காடு பணி நிறைவு பெறுகின்ற போது கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 விழுக்காடு பென்ஷன் ஆகவும், வழங்குவது ஒரு உறுதிப்படுத்தப்பட்ட பென்ஷன் ஆக பார்க்க முடிகிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களுடைய வாரிசுதாரர்களுக்கு குடும்ப பென்ஷன் வழங்குவதும் வரவேற்கத்தக்க விஷயமாக நம்பிக்கை கூறப்பட்ட விஷயமாக பார்க்க முடிகிறது.


மேலும் டிசிஆர்ஜி 25 லட்சம் வழங்குவதும் அதைவிட கூடுதலாக தமிழ்நாடு முதல்வர் பணி கொடையை 30 விழுக்காடு வழங்கி இருக்கிறார். இது மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் மத்தியிலே இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றோம், இதைவிட கூடுதலாக பணி நிறைவு செய்யும் பொழுது தவிர்பு சிபிஎஸ் ஆப்ஷனல் கொடுத்திருப்பது இந்த பரபரப்பு செய்தியாக உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad