முதுநிலை ஆசிரியர் பணிக்கான, இரண்டாம் கட்ட போட்டி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், தேர்தலுக்கு பின் தேர்வை நடத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை- 1, கணினி பயிற்றுனர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, தமிழ் உள்ளிட்ட 14 பாடங்களுக்கு, வரும், 12 முதல் 15ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அட்டவணை கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மற்ற பாடங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு அட்டவணை வெளியானது. வரும், 16 முதல் 20ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 19ம் தேதி மட்டும் விடுமுறை.இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் பலருக்கு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. 17ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை அதற்கான பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே, தேர்தல் முடிந்த பின்னர், இந்த தேர்வை நடத்துமாறு, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment