30.09.2024 வரை ஓய்வுபெற உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
ந.க. எண். 6819/அ4/83/2022, நாள். 02.02.2022.
பொருள்: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள்
மற்றும் ஆசிரியரல்லாதோர் - 01.10.2021 முதல்
30.09.2024 ஓய்வு பெற உள்ளவர்களினி விவரங்கள்
கோருதல் தொடர்பாக.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் சார்பான ( உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் (நிதிகாப்பாளர் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை) 01.10.2021 முதல் 30.09.2024 முடிய ஓய்வு பெற உள்ளவர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பூர்த்தி (Excel படிவத்தில்) செய்து 03.02.2022 அன்று காலை 8.00 மணிக்குள் இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) மின்னஞ்சல் முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment