பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பொதுச்செலாளர் பதவி வழங்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது தவறு. யாரோ போஸ்டர் ஒட்டியதற்கு நான் பொறுப்பாக முடியாது. இறுதி மூச்சு இருக்கும் வரை முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டு வரும் தலைமைக்கு நேர்மையாக இருப்பேன்.
தற்போதுள்ள அதிமுக தலைமையை ஏற்று செயல்படுவேன். தனியார் பள்ளிகள் அஞ்சும் வகையில், தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.