பொதுமாறுதல் விதியை தளர்த்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை!! - Asiriyar.Net

Sunday, June 23, 2019

பொதுமாறுதல் விதியை தளர்த்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை!!


2019-20 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் ஆணை வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொள்வோர் ஒரே பள்ளியில் 01.06.2019 அன்றைய தினம் மூன்றாண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

2016 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் கவுன்சிலிங் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தற்போது நடைபெற உள்ள ஆசிரியர் பொதுமாறுதலில் கலந்து கொள்ள இயலாத சூழல் உள்ளது. எனவே இந்த மூன்றாண்டு விதிமுறையை தளர்த்த வேண்டும் என ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Post Top Ad