அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் களுக்கு அறிவுரை - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - Asiriyar.Net

Monday, March 11, 2019

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் களுக்கு அறிவுரை - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த ஆண்டு மத்திய அரசு உதவியுடன் 301 அரசுப் பள்ளி களில் நவீன அறிவியல் ஆய்வகம் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக் கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1000 பள்ளிகளில் ஆய்வகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அரசு புதிதாக தொடங்கி உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 52 ஆயி ரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் இந்த ஆண்டுஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

பள்ளிகள் மூடல் இல்லை


தமிழகத்தில் 33 பள்ளிகளில் தலா ஒரு மாணவரும், 1,234 பள்ளி களில் 9 மாணவர்களுக்கும் குறைவாக படித்து வருகின்றனர். ஆனாலும் இந்த பள்ளிகளை மூடும்எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால் சிலர் தவறான கருத்து களை பரப்பி வருகின்றனர். குறைவான மாணவர்கள் உள்ள பள்ளி களில் கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு களுக்கும், 6 முதல் 8-ம் வகுப்பு களுக்கும் 4 வண்ண சீருடை பள்ளி தொடங்கும் நாளில் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு வழிகாட்டி


பிளஸ் 2 பாடப் புத்தகத்தில், மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டி பகுதி உள்ளது. இதைப்போன்று, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்கள், அடுத்தது என்ன படிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வதற்கும் வழிகாட்டும் பகுதி சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு துறைக்கு சென்று வேலைவாய்ப்பை பெற முடியும்.

மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, கோடையில் விடுமுறை விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் முன்வாசலை மூடிவிட்டு, பின்வாசல் வழியாக மாணவர்களை அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். இது குறித்து புகார் அளித்தால், அந்த பள்ளி மீதுநடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

Post Top Ad