Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, September 2, 2026

ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுகிறது - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு



கடந்த திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன.

தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சிக் காலத்தில் (மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை) தங்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடிய ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தமிழக சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

2021 முதல் 2026 வரை விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

ஜனநாயக ரீதியாகவும் அமைதியான முறையிலும் போராடிய மக்களின் உரிமைகளை மதிக்கும் விதமாக, மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது

ஆசிரியர்களுடன் சேர்த்து, திருவண்ணாமலை சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டம் மற்றும் பரந்தூர் புதிய விமான நிலைய எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளும் (குண்டர் சட்டம் உள்ளிட்டவை) முழுமையாகத் திரும்பப் பெறப்படுகின்றன

பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியோர் மீது முந்தைய திமுக ஆட்சியில் வழக்கு.

விவசாயிகள், ஆசிரியர்களுக்கும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அரசு துணைநிற்கும்

- சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவிப்பு

No comments:

Post a Comment

LightBlog