படி 1: EMIS போர்ட்டலில் லாகின் செய்தல் (Login)
- மொபைல் அல்லது கணினியில் உள்ள உலாவியை திறக்கவும்.
- EMIS லாகின் பக்கத்தில் பள்ளிக்கான Username மற்றும் Password உள்ளிட்டு Login செய்யவும்.
படி 2: SMC Reconstitution பகுதிக்குச் செல்லுதல்
- முகப்புப் பக்கத்தில் 3-வதாக உள்ள School மெனுவைக் கிளிக் செய்யவும்.
- School Details -> SMC Reconstitution 2026-28 என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: கூட்டம் வகை மற்றும் தேதியைத் தேர்ந்தெடுத்தல்
- Attendance பிரிவில் Meeting Type -> Parents Awareness Meeting என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Date என்பதில் கூட்ட நாளான 29/08/2026 என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 4: உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளிடுதல்
- Male Count: வருகை தந்த ஆண் உறுப்பினர்களின் எண்ணிக்கை.
- Female Count: வருகை தந்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை.
படி 5: புகைப்படத்தைப் பதிவேற்றுதல் (Photo Upload)
- Meeting Proof Photograph பகுதியில் Choose Files கிளிக் செய்து கூட்டத்தின் புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அளவு & வடிவம்: PNG / JPG format, 10 MB வரை.
படி 6: சேமித்து உறுதிப்படுத்துதல் (Submit)
- Submit Attendance கிளிக் செய்து, தோன்றும் உறுதிப்படுத்தல் சாளரத்தில் எண்ணிக்கையைச் சரிபார்த்து மீண்டும் Submit கொடுக்கவும்.
- Saved Attendance பட்டியலில் விவரங்கள் பதிவாகியுள்ளதை உறுதிசெய்யவும்.
படி 7: லாக் அவுட் செய்தல் (Logout)
- வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்து Logout செய்யவும்.


No comments:
Post a Comment