NILP - புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தேர்வு தொடர்பான செய்தி - Asiriyar.Net

Sunday, December 14, 2025

NILP - புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தேர்வு தொடர்பான செய்தி

 




அனைவருக்கும் வணக்கம் 

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் NILP தேர்வு தொடர்பான செய்தி 


💐 தேர்வு நாள்: 14.12.25 ஞாயிற்றுக்கிழமை 


💐 நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 வரை ஏதேனும் 3 மணி நேரம். 


💐 தேர்வு தொடர்பான செய்தி அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரியப்படுத்திட வேண்டும். 


💐 தேர்வு நடைபெறுவதை கற்போர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். 


💐 கேள்வித்தாள்களை 13.12.25 அன்று மைய தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைத்திட வேண்டும்.


💐 தேர்வு மையத்தில் இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதலின்படி போதுமான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். 


💐 வயதான கற்போர்கள் மாற்றுத்திறன் கொண்ட கற்போர்கள் அவர்களை வீட்டிலேயே தேர்வு எழுதலாம்.


💐 விடைத்தாள்களை தேர்வு முடிந்த அன்றைய தினமே தலைமை ஆசிரியர்கள் வட்டார வள மையங்களில் ஒப்படைத்திட வேண்டும். 


💐 தேர்வு நடைபெறும் நாளில் வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் குறைந்தது 10 மையங்களையாவது பார்வையிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேற்கூறிய வழிகாட்டுதலின்படி எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் தேர்வை சிறப்பாக நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad