பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் - ஆசிரியர் அரசு அலுவலர் கூட்டமைப்பு ( FOTA GEO ) அறிவிப்பு.
ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சங்கங்களின் கூட்டமைப்பான போட்டா-ஜியோ உயர்மட்டக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். ஆசிரியர் கட்டாயத் தகுதித்தேர்வை கைவிட வேண்டும். இவைகள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 29ஆம் தேதி மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
Click Here to Download - FOTA GEO - Strike Letter - Pdf

No comments:
Post a Comment