ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வந்த நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு சார்பில் திங்கட்கிழமை சங்கப் பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் பெருமக்கள் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று, ஜாக்டோ-ஜியோ (JACTO-GEO) மற்றும் அனைத்து அரசு ஊழியர்/ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்துவது அல்லது புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) உள்ள குறைபாடுகளைக் களைந்து மாற்றுத் திட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதிப்பது ஆகும். மேலும், சங்கங்களின் கோரிக்கைகளுக்கும் அரசின் நிதிநிலைக்கும் இடையே சமநிலையை எட்டுவதற்கான வழிமுறைகளும் ஆராயப்படும்.

No comments:
Post a Comment