1,400 ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும் - Asiriyar.Net

Monday, December 29, 2025

1,400 ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்

 



“கடந்த 2009 ஜூன் 1-க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூபாய் 8370 வழங்கப்படுகிறது. 


அதே சமயம் அந்த தேதிக்குப் பிறகு 2009-ல் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 5200 வழங்கப்படுகிறது. இந்த முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கடந்த மூன்று நாட்களாக போராடி வருகின்றனர். இந்த ஊதிய முரண்பட்டால் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தினர் கூறி வருகின்றனர்.


எனவே போராடுகின்ற ஆசிரியர் சங்கத்தின் தலைவர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், போராடும் 1,400 ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் அரசு திரும்பப் பெற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.”


இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad