EL Surrender - ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு குறித்த 3 விளக்கங்கள் - Asiriyar.Net

Monday, December 15, 2025

EL Surrender - ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு குறித்த 3 விளக்கங்கள்

 




ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு குறித்த 3 விளக்கங்கள் - 3 clarifications regarding earned leave surrender


சாதாரண மொழியில் EL SURRENDER (ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு) குறித்த 3 விளக்கங்கள்


தமிழக அரசின் தலைமைச் செயலாளர், திரு. N. முருகானந்தம், இ.ஆ.ப., அவர்களின் Letter (Ms) No.11486030/FR,III-2/2025-1, dated 08.12.2025 கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள EL SURRENDER குறித்த தெளிவுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


1. 26.04.2020 அன்றோ அல்லது அதற்கு முன்போ பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் (ஏற்கனவே EL SURRENDER செய்திருந்தால்):


தங்களது பணிக்காலத்தில் ஒருமுறையேனும் EL SURRENDER செய்திருந்தால், மீண்டும் அதே தேதியில் மட்டுமே 15 நாட்களுக்கு EL SURRENDER செய்ய முடியும்.


சுயமாக வேறு எந்த தேதியையும் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்க இயலாது.


2. 26.04.2020 அன்றோ அல்லது அதற்கு முன்போ பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் (இதுவரை EL SURRENDER செய்யாமல் இருந்தால்): உங்களது பணிக்காலத்தில் ஒருமுறைகூட EL SURRENDER செய்யாமல் இருந்தால்,


உங்களது ஆண்டு ஊதிய உயர்வு காலாண்டு காலப்பகுதியில் (Annual Increment Quarter) நீங்கள் விரும்பும் தேதியில் மட்டுமே 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை (EL) SURRENDER செய்ய முடியும்.


அந்த காலாண்டு காலப்பகுதிகள்: 1/1, 1/4, 1/7, அல்லது 1/10.


3. 27.04.2020 அன்றோ அல்லது அதற்கு பிறகோ (30.09.2025 வரை) பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்:


உங்களுடைய வருடாந்திர ஊதிய உயர்வு காலாண்டில் வரும் இடைப்பட்ட காலப்பகுதியில் நீங்கள் விரும்பும் ஏதாவது ஒரு தேதியில், அதாவது 01/01, 01/04, 01/7, அல்லது 01/10 ஆகிய காலாண்டு காலப்பகுதியில் நீங்கள் விரும்பும் தேதியில் 15 நாட்கள் EL ஐ SURRENDER செய்ய முடியும்


No comments:

Post a Comment

Post Top Ad