'பழைய ஓய்வூதியம் உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனில், ஜன., 6 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ - ஜியோ' எச்சரித்துஉள்ளது.
தமிழக அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரியர் சங்கங் களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2003, ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
உண்ணாவிரதம் பணியில் உள்ள ஆசிரி யர்களை, 'டெட்' தகுதி தேர்வு எனும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பது உள் ளிட்ட, 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, மாவட்ட நகரங்களில், ஜாக்டோ - ஜியோ கூட்ட மைப்பினர் நேற்று, உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழிலகத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தகுமார், அந்தோணிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறியதாவது:
எங்கள் தொடர் போராட்டத்தை, தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக் கது. ஓய்வூதியம், ஒவ்வொரு அரசு ஊழியரின் அடிப்படை உரிமை.
ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.
நிர்வாக சக்கரம் அதனால், எங்கள் போராட்டத்தை தீவிரப் படுத்துவோம். வரும், 27ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். அதன்பின், அரசு நிர்வாக சக்கரத்தை நிறுத் தும் வகையில், 2026 ஜன., 6ம் தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment