Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, September 4, 2026

அரசு ஊழியர்கள் கட்டாயம் Staff ID Card அணிந்து பணி செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை

அனைத்து அரசு அலுவலர்களும் மற்றும் ஊழியர்களும் பணி நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது


பெரும்பாலான அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் தங்களின் அடையாள அட்டையை கழுத்தில் அணியாமல் பணிபுரிந்து வருவதாக பார்வை 3-இல் காணும் இணையதள (Government of India) மனு வரப்பெற்றுள்ளது.

பார்வை 2-இல் காணும் இவ்வலுவலக சுற்றறிக்கையின் மூலம் ஏற்கனவே அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அலுவலக நேரத்தின் போது அடையாள அட்டை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை 3-இல் காணும் கடிதத்தில் அடையாள அட்டை அணியாமல் பணியாற்றுவது குறித்து மனு வரப்பெற்றுள்ளது. எனவே, பார்வை 1-இல் காணும் அரசாணை மற்றும் அறிவுரைகளின்படி இனி வருங்காலங்களில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அலுவலக பணிநேரத்தின் போது தங்களின் அரசு ஊழியர் அடையாள அட்டையை கட்டாயம் கழுத்தில் அணிந்து பணி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.




No comments:

Post a Comment

LightBlog