அனைத்து பள்ளி மையங்களிலும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என்ற பெயர் பலகையினை, கீழ்காணும் விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பின்படி அச்சிட்டு, திட்டம் வரிவுபடுத்தப்படுவதற்கு முன்னதாகவே பள்ளி மையங்களில் நிறுவிட உத்தரவு.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநரின் கடிதத்தின்படி ஊரகப் பகுதி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 17.09.2026-ஆம் தேதி முதல் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதால் முன்னேற்பாடுகள் செய்திட தெரிவிக்கப்பட்டது. தகுந்த
பார்வை 2-ல் காணும் கடிதத்தின்படி, இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்படும் மையங்களிலும் மற்றும் 6-8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ள அனைத்து பள்ளி மையங்களிலும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என்ற பெயர் பலகையினை, கீழ்காணும் விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பின்படி அச்சிட்டு, திட்டம் வரிவுபடுத்தப்படுவதற்கு முன்னதாகவே பள்ளி மையங்களில் நிறுவிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவரக்குறிப்பு:
பரிமாணம்: 4x2 அடி
சட்டகம்: பிரைமர் மற்றும் பெயிண்ட் பூசப்பட்ட 1 அங்குல மென் எஃகுக் குழாய்
அச்சு: UV ஸ்டார் ஃப்ளெக்ஸ், ஒளி இல்லாமல்
இணைப்பில் வழங்கப்பட்டுள்ள மாதிரி பெயர்ப் பலகையில், பள்ளியின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், பெயர்ப் பலகை நிறுவப்படும் பள்ளியின் உரிய விபரங்களை குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய பெயர் பலகைகளை உரிய முறையில் நிறுவுவதுடன். பெயர் பலகையின் அளவு, வண்ணம், விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பின்படி ஒரே சீராக இருப்பதை உறுதி செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வை 3-ன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக பகுதி மற்றும் பேரூராட்சி பகுதியில் ஏற்கனவே செயல்படும் மற்றும் விரிவுபடுத்தப்படவுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட பெயர் பலகையினை சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே வாங்கி வழங்கிட உரிய ஏற்பாடு செய்திட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.




No comments:
Post a Comment