Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, November 13, 2026

G.O 188 - பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக முனைவர் நரேஷ் நியமனம்




தொடக்கக் கல்வி இயக்குனராக பணியாற்றி வந்த நரேஷ் பள்ளிக்கல்வித்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர்

பள்ளி கல்வித்துறையின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் ஜெ. இன்னசென்ட் திவ்யா பிறப்பித்த உத்தரவின்படி, தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த நரேஷ் இப்பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினரான எம். பழனிசாமி, தனியார் பள்ளிகளின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளின் இயக்குநராக இருந்த எஸ். சுகன்யா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வி. சி. ராமேஸ்வரமுருகன் இடமாற்றம் செய்யப்பட்டு, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கூடுதல் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமக்ர சிக்ஷாவின் கூடுதல் திட்ட இயக்குநராக இருந்த எஸ். உமா, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குநரான ஸ்ரீதேவி பதவி உயர்த்தப்பட்டு, உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

G.O Ms.No.188  dt, 12.11.2026 - Orders - Pdf 👇👇👇




No comments:

Post a Comment