Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, October 13, 2026

TET தோல்வி அடைந்த ஆசிரியர்களை அரசு கைவிடாது - அமைச்சர் ராஜ்மோகன்




தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு அரசு கைவிடாது என்றும், அவர்களுக்கு மறுவாய்ப்புகள் உள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் பணியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 1,11,683 பேர் தோல்வியடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 2,20,464 பேரில் இடைநிலை ஆசிரியர்கள் 11,907 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 99,776 பேரும் தோல்வியடைந்துள்ளனர்.



கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 2010-ம் ஆண்டுக்கு  முன்பு பணியில் சேர்ந்த பட்டாதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி தமிழகத்தில் ஐந்தாண்டுகளுக்குள் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு 2 லட்சத்து 20 ஆயிரத்து 464 ஆசிரியர்கள் கடந்த ஜூலை மாதம் தேர்வெழுதினர்.

இதில் தகுதி தேர்வு முதல் தாள் எழுதிய 59 ஆயிரத்து 535 இடைநிலை ஆசிரியர்களில் 11 ஆயிரத்து 907 பேரும், தகுதி தேர்வு 2-ம் தாள் எழுதிய ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 929 பட்டதாரி ஆசிரியர்களில் 99 ஆயிரத்து 776 ஆசிரியர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், 2028 ஆகஸ்டு மாதம் வரை கால அவகாசம் இருப்பதால் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது. 



No comments:

Post a Comment

LightBlog