Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, October 13, 2026

அடுத்த TET தேர்வு எப்போது?




தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) ஜூலை 4 மற்றும் 5, 2026 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்பட்டது, இதன் தேர்வு முடிவுகள் அக்டோபர் 13, 2026 அன்று வெளியிடப்பட்டுள்ளன.

அவர்களுக்காக, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என, ஆண்டுக்கு மூன்று சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 


பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணி ஆற்றவும், பதவி உயர்வுகளுக்கும் தகுதி தேர்வு கட்டாயம் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தேசிய ஆசிரியர் கல்வி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் குறைந்தது ஒரு தகுதி தேர்வாவது நடத்த வேண்டும். இதன் மூலம் ஆசிரியர் கல்வி பட்டதாரிகள் தகுதி பெற்று ஆசிரியர்களாகும் வாய்ப்பையும் பெறுவார்கள்.



எனவே அடுத்த 2 ஆண்டுகளில் 6 தகுதி தேர்வுகளை நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் நீண்டகாலம் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக ஒரு சிறப்பு தகுதி தேர்வு நடத்துவது பற்றியும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.


No comments:

Post a Comment

LightBlog