Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, October 8, 2026

அரசு தொடக்கப்பள்ளி தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு?




📌திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே மானூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது 

இப்பள்ளியின் தண்ணீர் தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

📌காலாண்டு விடுமுறை காரணமாக, 10 நாட்களாக பூட்டப்பட்டிருந்த அரசு தொடக்கப்பள்ளி, திங்கட்கிழமை திறக்கப்பட்டது

📌ஆசிரியர்கள் மற்றும் காலை உணவு பணியாளர்கள் பள்ளியை சுத்தம் செய்தபோது, தண்ணீர் தொட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

📌தண்ணீர் தொட்டிக்குள் மலம் கழிக்கப்பட்டிருந்ததை கண்டு ஆசிரியர்கள், காலை உணவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

📌இதையடுத்து உடனடியாக அந்த தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

📌சமூக விரோதிகளின் அட்டூழிய சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும்

📌ஆனால், பள்ளி தண்ணீர் தொட்டிக்குள் மனிதக்கழிவு கலந்திருந்தது பற்றி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது

📌 காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் தலைமை ஆசிரியர் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது

📌இந்த தகவல் 2 நாட்களுக்கு பிறகு தெரியவந்ததைத் தொடர்ந்து, பள்ளிக்கு திரண்டு வந்த பெற்றோர் முற்றுகையிட்டனர்

📌பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரிடம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சம்பவம் பற்றி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்

📌பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில், பழநி கீரனூர் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை எனத் தகவல்

📌அரசு தொடக்கப்பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம் கழித்த சமூக விரோதிகள் யார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை

No comments:

Post a Comment

LightBlog