Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, October 6, 2026

பள்ளி வளாகத்தில் மாணவர்கள் ‘அரசியல் ’ கோஷம் - பள்ளி கல்வித்துறை அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு




பள்ளி மாணவர்கள் ஆளும் கட்சி பெயரை சொல்லி கோஷம் எழுப்பியது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் டிவிகே (தவெக), டிவிகே என கோஷம் எழுப்பும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின. அந்த வீடியோவில், அமைச்சர் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி அரசியல் கட்சியின் பெயரை கோஷமிடச் செய்துள்ளனர்.

மாணவர்கள் அவ்வாறு கோஷங்கள் எழுப்பியபோது, விழாவில் பங்கேற்றவர்கள் யாரும் அதைத் தடுக்க முன்வராதது அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாணவர்கள் அரசியல் சார்ந்த கோஷங்கள் எழுப்புவதை ஊக்குவிக்கக்கூடாது.

எனவே, கல்வி நிறுவனங்களில் கட்சி சார்ந்த அரசியல் நடவடிக்கைகளை தடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநில அளவிலான நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு நேற்று விசாரித்து, மனுதாரரின் புகார் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் விசாரித்து, 4 வாரத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

LightBlog