Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, October 5, 2026

லஞ்ச வழக்குகளில் சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீது துறைசார் நடவடிக்கை - உயர் நீதிமன்றம் உத்தரவு




'லஞ்ச வழக்குகளில் சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீது, குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்தாலும் துறைசார் நடவடிக்கை மேற்கொள்ள தடை இல்லை' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


லஞ்ச புகாரில் கையும் களவுமாக பிடிபட்டு, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குகளை எதிர்கொண்டு வரும் அரசு ஊழியர்கள் சுனிதா அகிலின் மெபெல், எட்டுராஜ், கணேச மூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோர், தங்களை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.


நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: 

லஞ்ச வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் மீது உடனுக்குடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல் பல ஆண்டுகள் சஸ்பெண்டில் வைத்திருப்பது, அவர்கள் எந்த பணியும் செய்யாமலேயே, பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வாழ்வாதாரப்படி பெற வழிவகை செய்கிறது. இது, நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது.

குற்றப்பின்னணி கொண்டவர்கள் அரசு பணியில் நுழைவது தடுக்கப்படும் நிலையில்,பணியில் இருக்கும் அரசு ஊழியர் ஊழல் வழக்கில் சிக்குவதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. குற்றவியல் வழக்குகளில் குற்றச்சாட்டுகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்.


துறை ரீதியான விசாரணையில், நிகழ் தரவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டை உறுதி செய்து தண்டனை வழங்க முடியும். எனவே, குற்றவியல் நீதிமன்ற தீர்ப்புக்காக, துறை ரீதியான விசாரணைக்கு காத்திருக்க தேவையில்லை.


நடத்தை விதிகளை மீறி, ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் அதிகாரிகளுக்கு பயம் உண்டாகும். எனவே, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க முற்படும் அரசு, ஊழியர் நடத்தை விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment

LightBlog