Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, October 1, 2026

ரேஷன் அட்டைகளை முடக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவு - காரணம் என்ன?



தமிழ்நாட்டில் e-KYC மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டில் e-KYC மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது. ஒன்றிய அரசு, 6 மாதங்களுக்கு மேல் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்காத முன்னுரிமை (PHH) குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை வரும் அக்டோபர்-1 முதல் தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் e-KYC சதவீதம் 96.69% ஆகும். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 10.05.2026 முதல் 02.08.2026, 08.08.2026, 09.08.2026, 29.08.2026, 19.09.2026 மற்றும் 26.09.2026 ஆகிய தேதிகளில் e-KYC சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாம்கள் மூலமாக, ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த e-KYC சரிபார்ப்பு, செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி அன்று 96.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த சிறப்பு முகாம்களின் மூலமாக 4,49,663 முன்னுரிமை (PHH) மற்றும் AAY திட்டப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

எனினும் e-KYC பணியினை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள். நியாய விலைக்கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது, கைவிரல்ரேகை /கண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் தங்களது e-KYC தகவல்களை விரைந்து பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

LightBlog