Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, September 1, 2026

TET கட்டாய தேர்ச்சி அவகாசம் 3 ஆண்டில் ஓராண்டு நிறைவு.




31.08.2026 அன்று TET கட்டாய தேர்ச்சி  அவகாச 3 ஆண்டில் ஓராண்டு  நிறைவு.

பணியில் உள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாய தேர்ச்சி பெற வேண்டும் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது 

பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்ச்சி பெற மூன்று ஆண்டுகள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது அதில் நேற்று 31.08.2026 அன்றுடன் ஓர் ஆண்டு  நிறைவு பெற்றது இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்திருப்பர் 

பல்வேறு கட்சிகள், சங்கங்கள் மற்றும் அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் மற்றும் தன்னாலான அனைத்து சட்ட முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்ற நேரத்தில் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தயார் செய்து கொள்ள வேண்டும். 

அடுத்து வரும் காலங்களில் வேற எவரேனும் வழக்கு தொடுத்தோ அல்லது அரசின் மீது அழுத்தம் கொடுத்தோ தேர்ச்சி என்பது கட்டாயம் என்ற நிலை மேலும் இறுகினால் சூழ்நிலைகள் கடுமையாகும் என்பதை ஆசிரியர்கள் மனதில் வைத்து தகுதி தேர்வுக்கான பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்

01.9.2030 முதல் பணியில் தொடர உள்ள ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெற  தயார் ஆகுங்கள்

31.08.2028 தேதிக்குள் எவரெல்லாம் TET தேர்ச்சி பெறுகிறீர்களோ.. அவர்கள் பணியில் தொடரலாம்.. இல்லையேல்  கட்டாய ஓய்வு அளிக்கப்படலாம்.

(👇 பிரமாணப் பத்திரம் படியுங்கள் )




இன்னும் 24 மாதங்கள் மட்டுமே உள்ளன. 

உண்மை நிலையை உணர்ந்து.... சிந்தித்து நம்முடைய பணிபாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிந்து அதற்கேற்ப செயல்படுங்கள்.
வெற்றி நமதே.....

No comments:

Post a Comment

LightBlog