Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, September 9, 2026

பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக இன்னசென்ட் திவ்யா IAS நியமனம் - Orders




தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் மு.சாய்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.



அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):




பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக இன்னசென்ட் திவ்யா  IAS நியமனம்

த.மோகன்: கூடுதல் தலைமைச் செயலா், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை. (சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா்)

ஸ்ரேயா பி. சிங்: கூடுதல் தலைமைச் செயலா், பள்ளிக் கல்வித் துறை. (சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு இணை ஆணையா்)


ராஜகோபால் சுங்கரா: சுற்றுலாத் துறை இயக்குநா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா். (நிதித் துறை இணைச் செயலா்)

ஷரண்யா அரி: விருதுநகா் மாவட்ட ஆட்சியா். (பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்)

எப்.அப்துல் ரசீக்:- பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா். (பொன்னேரி துணை ஆட்சியா்)

வி. நல்லசிவன்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா். (செங்கல்பட்டு துணை ஆட்சியா்)

ஜி. ரவிக்குமாா்: வேளாண்மை உழவா் நலத் துறை இணைச் செயலா். (திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்)

கே. சங்கீதா: கோவை வணிகவரித் துறை இணை ஆணையா் (மாநில வரி). (உதகமண்டலம் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநா்)

டாக்டா் வி.பி. ஜெயசீலன்: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா். (சுற்றுலாத் துறை இயக்குநா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா்)

டாக்டா் என்.ஓ. சுகபுத்ரா: சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநா். (விருதுநகா் மாவட்ட ஆட்சியா்)

தாகரே சுபம் த்யாந்தேராவ்: சென்னை மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்). (கோவை வணிகவரித் துறை இணை ஆணையா் மாநில வரி)

வீா் பிரதாப் சிங்: தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் ( சிப்காட்) செயல் இயக்குநா். (திருச்சி மாநகராட்சி ஆணையா்)

ந.பொன்மணி: திருச்சி மாநகராட்சி துணை ஆணையா். (இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா்)

ஏ. கேத்தரின் சரண்யா: வேலூா் மாநகராட்சி ஆணையா். ( சிப்காட் செயல் இயக்குநா்)

No comments:

Post a Comment

LightBlog