Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, September 24, 2026

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்




கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே மாணவியை குச்சியால் அடித்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோவை, பெருநாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் ஊராட்சி, பாலமலை அருகே, குஞ்சூர் பகுதியில் பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக கிருஷ்ண பிரியா மற்றும் ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 43 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டுப் பாடம் எழுதாமல் வந்ததாக தெரிகிறது. இதனால் தலைமை ஆசிரியை கிருஷ்ண பிரியா அந்த மாணவியை குச்சியால் முதுகுப் பகுதியில் அடித்துள்ளார். இதில் அந்த மாணவிக்கு காயம் ஏற்பட்டது.

இதை அறிந்த மாணவியின் பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியையிடம் கேட்டனர். அதற்கு அவர் தெரியாமல், நடந்துவிட்டதாக கூறியதாகத் தெரிகிறது. இதற்கு இடையே காயம் அடைந்த மாணவியின் புகைப்படம் மற்றும் பள்ளியின் கழிவறையை மாணவிகள் சிலர் சுத்தம் செய்யும் புகைப்படங்கள் வெளியானது.

இது தொடர்பாக கல்வித் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பி ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடவடிக்கை எடுத்தது. தற்பொழுது அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

LightBlog