பள்ளிவாழ்க்கையின் நினைவுகள் பசுமரத்தாணி போல் பதிந்து விட்ட அழியாக் கோலங்களாக ......
பள்ளி வாழ்வின் சில மறக்க முடியாத தருணங்களின் நினைவுகள் ....
நான் தரம் நான்கில் புதிய பள்ளியில் சேர்ந்தமுதல்நாள்...பள்ளிமுதல்வர்,
ஆசிரியர் ,மாணவர் யாவரும்புதுமுகங்கள்
மறைக்கப்படாத பக்கத்து வகுப்பு...முதலாம் பாடம் ஆசிரியர் வரவில்லை.
கடுமையான குணம்படைத்த கொதியர் என மாணவர்களால்பட்டம்பெற்றபள்ளிமுதல்வர் பற்றி செவிவழிவந்த தகவல்கள்..
நான் புத்தகக் கட்டுக்களை அவிழ்க்காமல்,பள்ளி நடைமுறைகள் தெரியாமல் அமர்ந்திருக்க அனைத்து மாணவரும் மிகச்சிரத்தையாக படித்த(நடித்த) வண்ணம் இருந்தார்கள்..
ஏன் காலையிலேயே படித்த(நடித்த) வண்ணம் இருக்கின்றனர் எனப் புரியாது இருக்க,பள்ளிமுதல்வர் வகுப்பறையை வலம் வந்தமை தெரியும் போது நானும் முகமறியா பக்கத்துதரம் ஐந்து வகுப்புத் தோழமையின் புத்தகம் ஒன்றை எடுத்து நடிக்க சடாரென்று பிரம்படி பளார் என இரண்டு என் முதுகில் விழுந்த தருணம்..
இதே பாணியில் வீட்டிற்கு வந்து வரிசையாக நின்ற பனைமரங்கள் எல்லாவற்றையும்மாணவர்களாகவும், என்னைகொதியராகவும் கற்பனை பண்ணி,"ஏன் இன்றைக்குப் பள்ளிக்கு வரவில்லை.".என்று திட்டியபடி பனைமரங்கள் ஒவ்வொன்றாகப் பிரம்பால் நல்ல அடி கொடுத்து பழிவாங்கிய தருணங்கள்.....
ஆங்கில சொல்வதெழுதல் பத்துக்கு ஆறு பிழைகள்,ஒவ்வொரு பிழைக்கும்
கைமொழியில் மர அடிமட்டத்தால் அடி வாங்கிய தருணங்கள்....
தரம் ஆறு தொடங்கி தரம் ஒன்பது வரை வேறு பள்ளியில் அதுவும் மறக்க முடியாத அனுபவங்கள்..விரும்பாதபாடங்கள், விரும்பாத ஆசிரியர்கள் இப்படிஎத்தனையோ....
கரும்பலகையில் மட்டும் தனக்கு தெரிந்த கணக்கை தானே செய்து விட்டுத் திரும்பும் ஆசிரியர்கள்.
நாங்கள் கும்மாளம் அடித்துவிட்டு அப்படியே கரும்பலகையில் உள்ளதைப் பார்த்து எழுதிவிட்டு பெரிய சரி ஒன்றை வாங்கி கொப்பிகளை மூடி வைத்த நாட்கள் பல....
விரும்பிப் படிக்கும் பாடங்களைப் படிக்க முடியாமல் ஆசிரியர்களை நித்திரையால் தட்டி எழுப்பியும்,நாம் விரும்பாத பாடங்களில் ஆசிரியர்கள் எங்களைத்தட்டி எழுப்பிய நாட்களும் மறையாத காயங்களாகி விட்டதும் கடந்து விட்ட தருணங்கள்.....
விளையாட்டு நிகழ்வுகளிற்கு பங்குபற்ற விருப்பமில்லாமல் ஒரு குழுவாக மறைந்து மறைந்து இருந்துதோழமைகள் காட்டிக் கொடுத்து ஆசிரியர்களிடம் திட்டுவாங்கிய தருணங்கள்....
போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் பக்கத்து தோழமைகளின் ஆக்கங்களை மறைத்து விட்டு எதுவுமே தெரியாதது போல் முழித்த தருணங்கள்...
தோழமைகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து தோளில்புத்தகப்பை சுமந்து பள்ளி செல்லும் தருணங்கள்...
எல்லோரும் பாட நான் வாயசைக்க சங்கீதம் பாடியதிருப்தியுடன் இருந்த வேளை தனிப்பாடலின் போது "சுட்டுப்போட்டாலும்பாட்டு வராது" என்று
சங்கீத ஆசிரியர் அப்பாவுக்குகூறிய தருணம்....
பள்ளிநிகழ்வில் அதிகாரி ஒருவர் பேசும் போது அவரின் சட்டைப் பொத்தான்கள் மாறிப் பொருத்தியமையைப் பார்த்து சிரித்த தருணங்கள்....
இடைவேளை மணி அடித்ததும் வகுப்பில் ஆசிரியர் நிற்பதைப் பொருட்படுத்தாது சாப்பாட்டுப் பெட்டிகளைக் பிரிக்கும் தருணங்கள்..
பக்கத்துப் பிள்ளை சிலேற்றை உடைத்து விட்டா என ஆசிரியரிடம் கூறும்போது எதையும் செவிமடுக்காது ஆசிரியர் சிலேற்றை என்னிடம் இருந்து வாங்கி சரி போட்ட தருணங்கள்.....
பள்ளிவிழாக்களில் மேடை நிகழ்வுகளில்
கலந்து சிறப்பித்த தருணங்கள்...
பள்ளிப்பருவம் கல்லூரி வாழ்க்கை
பாசி படர்ந்த பயங்கரப் பாதை
விழித்து நடந்தால்
வழுக்கி விழ மாட்டாய்....
பள்ளிப்பருவ வாழ்க்கை என்றும்
நினைவில் நிற்கும்......


No comments:
Post a Comment