Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, September 28, 2026

உ.பி - 27 ஆண்டுகள் விடாமுயற்சி - 59 வயதில் கிடைத்தது அரசு பள்ளி ஆசிரியர் பணி!




உத்தர பிரதேசத்தில், அரசு ஆசிரியர் பணிக்காக 27 ஆண்டுகளாக தொடர்ந்து தேர்வெழுதி வந்த நபர், 59 வயதில் அரசு பணிக்கு தேர்வாகி உள்ளார்.


உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரவுத் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் குமார் சர்மா, 59. கடந்த 1999ம் ஆண்டு முதல் அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்காக தொடர்ந்து தேர்வுகளில் பங்கேற்று வந்தார்.


இதுவரை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஆறு முறையும், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வில் நான்கு முறையும் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், எட்டு முறை நேர்காணலிலும் பங்கேற்றுள்ளார். எனினும், பல்வேறு காரணங்களால் இறுதிப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.


ஒவ்வொரு முறையும் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகும், அவர் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தி, அடுத்த தேர்வுக்கு தயாரானார். தற்போது நடந்த தேர்வில் நேர்காணல் இல்லாத நிலையில், அவர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


செப். 22ம் தேதி லக்னோவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஷ்டானில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து சமஸ்கிருத ஆசிரியர் பணிக்கான நியமன கடிதத்தை சர்மா பெற்றார்.


அரசு ஆசிரியர் பணிக்காக தயாராகிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சர்மா தனியார் பள்ளிகளில் கடந்த 27 ஆண்டுகளாக சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

No comments:

Post a Comment

LightBlog