16.12.2024 மற்றும் 17.12.2024 ஆகிய தேதிகளில் அனைத்து CEOகளுக்கான ஆய்வுக்கூட்டம் - Director Proceedings - Asiriyar.Net

Monday, December 9, 2024

16.12.2024 மற்றும் 17.12.2024 ஆகிய தேதிகளில் அனைத்து CEOகளுக்கான ஆய்வுக்கூட்டம் - Director Proceedings

 

பள்ளிக் கல்வித் துறை - அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்- 16.12.2024 மற்றும் 17.12.2024 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் -தகவல் தெரிவித்தல் - சார்பாக.


பார்வை: தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.064422/பிடி1/இ2/2024, நாள்.09.11.2024.


பார்வையில் காணும் கடிதத்தின் படி மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி துறை செயலர் அவர்களின் தலைமையில் அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கான டிசம்பர் 2024க்கான ஆய்வுக்கூட்டம் 16.12.2024 மற்றும் 17.12.2024 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பள்ளப்பாளையம், பாப்பம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள Kalaignar Karunanithi Institute of Technology-ல் நடைபெறும் என்ற விவரம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் ஆய்வுக் கூட்டத்திற்கான கூட்டப் பொருள் சார்பான விவரங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.





No comments:

Post a Comment

Post Top Ad