Teachers Transfer 2024 - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - Schedule & Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 6, 2024

Teachers Transfer 2024 - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - Schedule & Director Proceedings

 





2024-25 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை - தொடக்கக் கல்வித் துறை


ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு மே 13ம் தேதி தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 


தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் விதிமுறைகள் முடிந்தபின் ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் பெற்ற இடங்களில் தேர்தல் கட்டுப்பாடுகள் விளக்கிக் கொள்ளப்பட்ட பின் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 


ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - 2024 (தொடக்கக் கல்வி) - அட்டவணை*


1. பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாகப் பதிவேற்றம் செய்தல் - 13.05.2024 06.00AM முதல் 17.05.2024 06.00PM வரை.


2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List)மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல் - 20.05.2024 10.00 AM திங்கள்


3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections)‌-2105.2024 05.00PM செவ்வாய்


4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு (Release off seniority list) Release of Vacancy List Final) - 23.05.2024 (வியாழன்)


5. மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு-24.05.2024 (வெள்ளி)


6. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு - 28.05.2024 (செவ்வாய்)


7. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 31.05.2024 (வெள்ளி)


8. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-01.06.2024(சனி) (முற்பகல்)


9. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 01.06.2024 (சனி)(பிற்பகல்)


10. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 03.06.2024 (திங்கள்)


11. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)- 06.06.2024 (வியாழன்)


12. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-07.06.2024 வெள்ளி (முற்பகல்)


13. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)-07.06.2024 வெள்ளி (பிற்பகல்)


14. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-08.06.2024 (சனி)


15. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)-10.06.2024 (திங்கள்)


16. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-11.06.2024 (செவ்வாய்)(முற்பகல்)


17. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 11.06.2024 செவ்வாய் (பிற்பகல்)


18. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-12.06.2024


19. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற் - 13.06.2024 (வியாழன்)


20. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)- 14.06.2024 (வெள்ளி)(முற்பகல்)


21. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்). - 15.06.2024.



Click Here to Download - General Transfer Counselling 2024 - 25 - Schedule -Director Proceedings - Pdf





Post Top Ad