Tamil Talent Search Examination - தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - அக்டோபர் 2023 - Instructions - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 5, 2023

Tamil Talent Search Examination - தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - அக்டோபர் 2023 - Instructions

 

பள்ளி மாணவ , மாணவியர்களின் அறிவியல் , கணிதம் , சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது . 


2023-2024 - ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு 15.10.2023 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடத்தப்படவுள்ளது . இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ .1500 / - வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் . 


இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.


 தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும் . அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும் . 2023-2024 - ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் ( CBSE / ICSE / உட்பட ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் , 15 : 10.2023 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது . 


மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 05.09.2023 முதல் 20.09.2023 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / - சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் . 20.09.2023




Post Top Ad