Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, November 22, 2026

G.O 331 - பள்ளி மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்க, 100 வட்டார அளவில் பள்ளி சுகாதாரத் திட்ட அளவுகள் நிறுவ அரசாணை வெளியீடு




தமிழ்நாடு முழுவதும் 100 ஒன்றியங்களில் பள்ளி மாணவர்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் சுகாதார திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அரசாணை வெளியிட்டுள்ளது.

2026-2027-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தில் 17.08.2026 அன்று சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்திருந்தார். அதில், பள்ளி மாணவர்களின் நலனிலேயே ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்து, அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வகையில், முதல் முறையாக தமிழ்நாடு முழுவதும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறை சிகிச்சைகளை, தேசிய பள்ளி சிறார் நலத் திட்டத்துடன் (RBSK) இணைந்து வழங்கும் வகையில், 100 வட்டாரங்களில் பள்ளி சுகாதார திட்ட அலகுகள் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், தேசிய ஆயுஷ் இயக்கத்தின் இயக்குநர், 01.10.2026 அன்று இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் 29.09.2026 அன்று அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார். இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.1,60,00,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை முழுவதும் 100 யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர்களுக்கான ஊதியத்திற்காக செலவிடப்படும். ஒரு மருத்துவருக்கு மாதம் ரூ.40,000 வீதம், 4 மாதங்களுக்கு, 100 மருத்துவர்களுக்கு ரூ.1,60,00,000 வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 100 ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும். அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வட்டார அளவிலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய சுகாதார நிலையங்களில் இந்த மையங்கள் அமையும்.

அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, தா.பழூர், திருமானூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பரங்கிமலை, அச்சரப்பாக்கம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுல்தான்பேட்டை, சர்க்கார் சாமகுளம், தொண்டாமுத்தூர், திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர், மீஞ்சூர், ஆர்.கே.பேட்டை, சோழவரம், திருவெள்ளங்காடு, விள்ளிவாக்கம், திருவண்ணாமலை மாவட்டத்தில் பேரணாம்பட்டு அல்லது பெரணாமல்லூர், செங்கம், கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், போளூர், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 100 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரின் கருத்துருவை பரிசீலித்த அரசு, தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் ஆர்பிஎஸ்கே – ஆயுர்வித்யா திட்டத்தின் கீழ் பள்ளி சுகாதார திட்டத்தை 100 ஒன்றியங்களில் ரூ.1.60 கோடி செலவில் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

G.O.Ms.No.331 - Orders - Pdf 👇👇👇



No comments:

Post a Comment