Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, November 9, 2026

G.O 193 - HBA Loan - வீடு கட்டும் முன்பணம் - புதிய விதிகள் 2026 - அரசாணை




வீடு கட்டும் முன்பணம் - புதிய விதிகள் 2026 - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அகில இந்திய பணி அலுவலர்களுக்கு வழங்கப்படும் வீடு கட்டும் முன்பணம் (House Building Advance - HBA) தொடர்பான பழைய விதிகள் அனைத்தும் திருத்தி, மீண்டும் புதியதாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய வீட்டு வசதி முன்பண (HBA) விதிகள், 2026 குறித்தான அரசாணை G.O.(Ms).No.193 (நாள்: 23.10.2026) இன் முக்கிய அம்சங்கள் 

• அரசாணையின் பெயர்: இதுவரை நடைமுறையில் இருந்த வீட்டு வசதி முன்பண விதிகளுக்குப் பதிலாக, இனி இவை "தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (வீட்டு வசதி முன்பண முறைப்படுத்துதல்) விதிகள், 2026" என்று அழைக்கப்படும்.

• தகுதி (Eligibility): அரசு ஊழியர்கள் மற்றும் அகில இந்திய சேவை (AIS) அதிகாரிகள் விண்ணப்பிக்கும் தேதியில் குறைந்தது 4 ஆண்டுகள் தொடர்ச்சியான வரன்முறைப்படுத்தப்பட்ட சேவை (4 Years Regular Service) முடித்திருக்க வேண்டும் மற்றும் தகுதிகாண் பருவம் (Probation) வெற்றிகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

• முன்பணத் தொகை (Loan Amount Limit): முன்பணத் தொகை ஒரு ஊழியரின் 90 மாத அடிப்படை ஊதியம் (Basic Pay + DA + Special Pay) என்ற கணக்கீட்டின் அடிப்படையிலும், அரசாங்கம் அவ்வப்போது நிர்ணயிக்கும் அதிகபட்ச உச்சவரம்புக்கு உட்பட்டும் வழங்கப்படும்.

• தவணைத் தொகையைத் திரும்பச் செலுத்துதல் (Repayment Period):
• அசல் (Principal) தொகை அதிகபட்சமாக 180 மாதத் தவணைகளிலும், அதற்குரிய வட்டி (Interest) அதிகபட்சமாக 60 மாதத் தவணைகளிலும் (மொத்தம் 20 ஆண்டுகள்) சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

• ஓய்வுபெறுவதற்கு முன்பாக முழுத் தொகையையும் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.
• தம்பதியர் இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால்: கணவன், மனைவி இருவரின் கூட்டுத் திருப்பிச் செலுத்தும் திறனின் (Combined Repaying Capacity) அடிப்படையில் கூட்டு முன்பணம் (Combined HBA) பெறத் தகுதியுண்டு.

• முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டண விலக்கு: இந்த விதிகளின் கீழ் அரசாங்கத்திடம் மேற்கொள்ளப்படும் அடமானப் பத்திரங்களுக்கு (Mortgage Deed) முத்திரைத்தாள் கட்டணம் (Stamp Duty) மற்றும் பதிவுக்கட்டணத்தில் (Registration Fee) இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. (குறிப்பு: அரசு ஊழியர் அல்லாத கணவன்/மனைவி பெயரில் உள்ள இடத்தில் வீடு கட்ட கூட்டு அடமானப் பத்திரம் எழுதினால் இந்த விலக்கு பொருந்தாது).

• சிறப்பு குடும்ப நல நிதித் திட்டம் (Special Family Benefit Fund): HBA பெறும் அனைத்து ஊழியர்களும் இந்தத் திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்படுவர். தவணைத் தொகையில் 1% சந்தாவாகப் பிடித்தம் செய்யப்படும். ஊழியர் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால், நிலுவையில் உள்ள கடன் மற்றும் வட்டித்தொகை இந்த நிதியின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.

G.O.Ms.No.193 - HBA for Govt Employees - Pdf - 👇👇👇


No comments:

Post a Comment

LightBlog