Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, November 4, 2026

Cake Distribution - HM Role - தலைமையாசிரியர்களின் பணிகள்



தலைமையாசிரியர்களின் பணிகள்:
பெறப்பட்ட கேக்குகளை விநியோகிக்கும் வரை சுத்தமான, குளிர்ச்சியான, மூடிய அறையில் சேமிக்க வேண்டும்.

பெறப்பட்ட கேக்குகளை பாதுகாத்தல் சார்ந்து ஒருவரை நியமிக்க வேண்டும். திருட்டு, சேதம் அடைதல் மற்றும் அந்நியர்களிடமிருந்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.

பெறப்பட்ட அளவைச் சரிபார்த்து, தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்ட, பள்ளி முத்திரையுடன் கூடிய ஒப்புகை மற்றும் விநியோகப் படிவங்களை (படிவம் 1,2) உடனுக்குடன் வழங்க வேண்டும் மற்றும் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும்.

13.11.2026 அன்று கேக்குகளை மாணவர்கள், ஆசிரியர்கள், SMC ஆசிரியர் உறுப்பினர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என அனைவருக்கும் வழங்க வேண்டும்.

உணவு ஒவ்வாமை அல்லது உணவுக் கட்டுப்பாடு உள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

மாணவர்கள் கைகளைக் கழுவிய பின்னர் பெற வேண்டும்; விநியோகம் ஒழுங்காகவும் சமமாகவும் நடைபெற வேண்டும்; எந்த மாணவரும்
விடுபடக்கூடாது.

கேக் உறைகளைக் குப்பைத் தொட்டிகளில் சேகரித்து, வளாகத்தைத் தூய்மையாக வைக்க வேண்டும்.

கேக்குகளைப் உரிய நாளன்று வருகை புரியாத மாணவர்களுக்கான பாதுகாப்பாக வைத்து, அவர்கள் பள்ளி வரும் நாளில் வழங்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து அட்டை கிடைத்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

விநியோகம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பள்ளியில் பராமரிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களின் படி இத்திட்டத்தைத் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்திக் கண்காணித்து, ஒவ்வொரு நிலையிலும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்து, 13.11.2026 அன்று அனைவருக்கும் கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வெற்றிகரமாக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும், இப்பணிகளில் எவ்வித புகார்களுக்கு இடந்தராத வகையில் செயல்பட வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





No comments:

Post a Comment

LightBlog