Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, November 4, 2026

அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர், "வெற்றிப் பள்ளிகள்" என மாற்றம் செய்யப்படவில்லை




தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர் ‘வெற்றிப் பள்ளிகள்’ என மாற்றப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் தவறானது. 2025 முதல் நடைமுறையில் உள்ள இத்திட்டம், வட்டார அளவில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளுக்கு மாதிரிப் பள்ளிகள் போன்ற பயிற்சிகளை வழங்கவே தொடங்கப்பட்டது. இவற்றின் பெயர் மாற்றப்படவில்லை

 -  தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு.

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயரை ‘வெற்றிப் பள்ளிகள்’ என மாற்றியிருப்பதாக பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் கூறிய நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், "தமிழகத்தில் 38 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயரை ‘வெற்றிப் பள்ளிகள்’ என மாற்றியிருப்பது தவெக அரசின் தேவையற்ற நிர்வாக நடவடிக்கை. ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டங்களுக்குப் புதிய பெயர் சூட்டி, அதன் மூலம் தங்களது முத்திரையைப் பதிக்க நினைப்பதைத் தவிர, இந்தப் பெயர் மாற்றத்தால் மாணவர்களுக்கு என்ன கூடுதல் நன்மை கிடைக்கப் போகிறது? பள்ளிகளின் பெயரை மாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதிலும், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் இந்த அரசு காட்ட வேண்டாமா?

பெயர்களை மாற்றுவதால் வெற்றி கிடைத்துவிடாது முதல்வர் அவர்களே, உங்களின் அரசின் செயல்பாடுகளில்தான் வெற்றி இருக்கிறது. ஆனால் அதை தவெக அரசு தொடர்ந்து தவறவிட்டு வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். திட்டங்களின் பெயர்களை மாற்றுவதிலேயே ஆட்சியின் சாதனைகளைத் தேடாமல், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த முதல்வர் விஜய் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். " எனக் குற்றஞ்சாட்டினார். 

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தவெக அரசு, தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர், "வெற்றிப் பள்ளிகள்" என மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த 2025ஆம் ஆண்டிலிருந்தே வெற்றிப் பள்ளிகள் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. வெற்றிப் பள்ளிகள் என்பது ஓர் வட்டாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து, மாதிரிப் பள்ளிகளைப் போன்ற அனைத்து பயிற்சிகளையும் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டதாகும் என விளக்கம் அளித்துள்ளது. 


No comments:

Post a Comment

LightBlog