இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை டிச.8க்குள் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆண்டுவாரியாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கு. பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தியது குறித்து அறிக்கை தர பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் பதவி உயர்வுக் கலந்தாய்வு நடத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
01.01.2022 முதல் ஆண்டுவாரியான பணிமூப்பு (Year-wise Panel) அடிப்படையில் பதவி உயர்வுக் கலந்தாய்வு நடத்திடக் கோரி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில், கடந்த *09.06.2026* அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி P T ஆஷா அவர்கள் தீர்ப்பு வழங்கியிருந்தார்🔱.
🦚இவ்வழக்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. என் இளங்கோ மற்றும் , தொடக்கக் கல்வித்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சா. முத்தமிழ்ச்செல்வன் மனுதாரர்களாக உள்ளனர்🔱.
🦚தீர்ப்பு வழங்கப்பட்டு சுமார் ஐந்து மாதங்களைக் கடந்தும் அரசு அதனை நடைமுறைப்படுத்தாததால், சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினர்🔱.
🦚இதன் அடிப்படையில், கடந்த *16.11.2026* அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி P T ஆஷா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பினை *08.12.2026-க்குள் முழுமையாகச் செயல்படுத்தி, ( ஆண்டுவாரியான பேனல் தயாரித்து பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி)* அதற்கான செயலாக்க அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது🔱.
*🦚மேல் முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்ற நிபந்தனையோடு கலந்தாய்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது🔱.*
*🦚இந்த உத்தரவை* *08.12.2026 க்குள்* *நடைமுறைப்படுத்த*
*வில்லையெனில்* *வழக்கில் தொடர்புடைய அனைத்து அரசு உயர் அதிகாரிகளும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment