சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக நீதித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் IFHRMS தளம் வழியாகச் சொத்து மற்றும் கடன் விவரங்களைச் சமர்ப்பிப்பது மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, கீழ்வரும் அனைத்துப் பிரிவினருக்கும் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்தச் சொத்து விவர அறிக்கை சமர்ப்பிக்கும் நடைமுறை முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது:
1. தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பணியில் உள்ள நீதித்துறை அலுவலர்கள் (Judicial Officers).
2. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைத்து உயர் நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்.
3. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் கீழ் பணிபுரியும் மாவட்ட நீதித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்.
மேற்கண்ட அனைவரும் IFHRMS தளம் வழியாக தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை அக்டோபர் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும், இதற்கான மாற்றுத் தேதிகள் அல்லது அடுத்தகட்ட அறிவிப்புகள் உயர் நீதிமன்றத்தின் மறுஉத்தரவிற்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என்பதும் இந்த சுற்றறிக்கை மூலம் தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment