Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, October 29, 2026

Gazette No.451 - அரசுத் துறை பணியாளர்கள் பணி நியமனத்தில் புதிய முறை - தமிழக அரசு உத்தரவு




தமிழ்நாடு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் (வெளிமுகமை) முறையில் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்க புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் (வெளிமுகமை) முறையில் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வெளிமுகமை வழியே பணியாளர்களை பணி அமர்த்த விரும்பினால், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை மட்டுமே அணுக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்கும் முக்கியப் பொறுப்பை சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.   

அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுச் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் தேவையான ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களை அவுட்சோர்சிங் மூலமாக நியமிக்கும் போது வெளிப்படைத்தன்மையையும் சீரான தன்மையையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   





No comments:

Post a Comment

LightBlog