Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, October 23, 2026

அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு - அரசின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் விமர்சிக்கக் கூடாது - மீறினால் நடவடிக்கை?




அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ, அல்லது ஊடகங்களிலோ (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மீம்ஸ் (Memes) போன்றவை) பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது.

பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான கருத்துகளை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது.

> அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது.

எனவே, இத்துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மேற்கண்ட விதிமுறைகளைக் தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.




No comments:

Post a Comment

LightBlog