மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான கவுன்சிலிங் மற்றும் புதிய ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும் வகையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை, காலிப்பணியிடங்கள், உபரி ஆசிரியர்கள் உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக சேகரித்து அறிக்கை தயாரிக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வித்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, ‘‘ஆகஸ்ட் மாத நிலவரப்படி வகுப்பு வாரியாக மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்’ பதிவுகளின் அடிப்படையில் சேகரித்து, கல்வி மாவட்ட அளவில் அறிக்கை தயாரிக்க வேண்டும்.
விவரங்கள் தவறாக இருப்பது பின்னர் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க நேரிடும். எனவே, ஆசிரியர்–மாணவர் விகிதத்தை துல்லியமாக கணக்கிட்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 57 கல்வி மாவட்டங்களின் விவரங்கள் அக். 21 முதல் 28-ம் தேதி வரை சென்னையில் கூர்ந்தாய்வு செய்யப்பட உள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘விவரங்கள் பெறப்பட்டதும், மீதமுள்ள பணியிடங்களுக்கு கவுன்சிலிங் மற்றும் புதிய ஆசிரியர் நியமனம் குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றனர்.

No comments:
Post a Comment