பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு (2026–2028) – பார்வையாளர்களின் பணிகள் & முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
நிகழ்விற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:
- அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை முன்கூட்டியே தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.
- கூட்டம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
- மறுகட்டமைப்புக்குத் தேவையான படிவங்கள் மற்றும் ஆவணங்கள் தயாராக உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.
- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிக்கு மட்டுமே பார்வையாளராகச் செல்ல வேண்டும்.
நிகழ்வின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள்:
- நிகழ்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவே ஒதுக்கப்பட்ட பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
- நிகழ்வு உரிய நேரத்தில் தொடங்க உதவிட வேண்டும் மற்றும் நிகழ்வு முடியும் வரை பள்ளியிலேயே இருக்க வேண்டும்.
- எவ்விதக் குறுக்கீடும் செய்யாமல், நடுநிலையோடு நிகழ்வுகளைக் கவனிக்க வேண்டும்.
- பெண்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், தலைமையாசிரியருக்குச் சார்பற்ற முறையில் தீர்வு காண ஆலோசனை வழங்க வேண்டும்.
நிகழ்விற்குப் பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:
- படிவங்கள் 1 முதல் 7 வரையிலான ஆவணங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
- பார்வையாளர்களுக்கான Google Form அறிக்கையை நிகழ்வு நடைபெறும் அதே நாளில் மாலை 6 மணிக்குள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டாயம் செய்ய வேண்டியவை:
- அரசு வழிகாட்டுதல்களையும் சுற்றறிக்கைகளையும் முழுமையாகப் பின்பற்றி நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
- மாணவர் நலன் மற்றும் பள்ளி வளர்ச்சியையே முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
- ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மாவட்ட/வட்டாரப் பார்வையாளர் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
- தங்களுக்குத் தெரிந்த நபர்களை உறுப்பினராகத் தேர்வு செய்ய தலைமையாசிரியருக்கு அழுத்தம் கொடுப்பதோ பரிந்துரைப்பதோ கூடாது.
- தேர்வு முடிவுகளை மாற்ற முயற்சி செய்யக் கூடாது.
- தலைமையாசிரியரின் மறுகட்டமைப்பு நடைமுறைகளில் தேவையின்றி தலையிடவோ, ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறவோ கூடாது.
- ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பார்வையாளராகப் பங்கேற்கக் கூடாது.


No comments:
Post a Comment