அனைத்து ஆசிரியர்களுக்கும் EMIS இணையதளத்தில் உயர் கல்வி வழிகாட்டி சார்ந்து மதிப்பீட்டுத் தேர்வு 21.09.2026 முதல் 30.09.2026 வரை நடைபெற உள்ளது!
உயர்கல்வி வழிகாட்டித் திட்டம் 2026-2027 ஆம் கல்வியாண்டில் பயிற்சி பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மதிபீடு தேர்வு (Assessment) நடைபெறுதல் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்குதல் – சார்ந்து,
பார்வையில் காணும் இவ்வலுவலக செயல்முறைகளில் மாவட்ட அளவில் பயிற்சிப் பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், EMIS இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்த ஆசிரியர்களால் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வில் பங்குபெற முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, மாவட்ட அளவில் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள், சார்ந்த பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் பள்ளி அளவில் பயிற்சி வழங்குவதால், இம்மதிப்பீட்டுத் தேர்வினை மாவட்ட மற்றும் பள்ளி அளவில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் 21.09.2026 முதல் 30.09.2026 வரை EMIS இணையதளத்தில் இம்மதிப்பீட்டு தேர்வினை தவறாது மேற்கொள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


No comments:
Post a Comment