Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, September 25, 2026

காலை உணவு திட்டம் - ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவு - DEE Proceedings

காலை உணவு திட்டம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள DEE உத்தரவு.


காலை உணவு திட்டம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

தொடக்கக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

22.09.2026 பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்கீழ் தேதியிலிருந்து 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

காலை உணவு வழங்கும் நிகழ்வில் பின்வரும் அறிவுரைகளை தவறாது பின்பற்ற அனைத்து அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)

சமையலறையில் சமையல் செய்யும் பொருட்கள் தவிர பிற பொருட்கள் வைப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

சமையலறை புகை, தூசி, நூலாம்படை இல்லாமல் தூய்மையாக எப்போதும் பராமரிக்கப்பட்டு வர வேண்டும்.

சமையல் செய்யும் பாத்திரங்கள் மற்றும் பரிமாறும் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் நன்கு சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.

சமைத்த உணவை மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்னர் அவ்வுணவு அவர்களின் உடல்நலத்திற்கு உகந்த தரமான உணவு தான் என்பதை ஆசிரியர்கள் உறுதிசெய்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

சமையல் செய்த பின்னர் பரிமாறுவதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை முழுமையாக மூடி வைத்து, தேவைப்படும்போது மட்டும் திறந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

சமையல் செய்யும் போதும், சமைத்த பின்னர் பரிமாறுவதற்கு பிற பாத்திரங்களில் உணவை மாற்றிய பின்பும், மூடி வைத்த நிலையில் பாதுக்காப்புடன் இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.

மாணவர்களுக்கு உணவு பரிமாறுதல் பணியை தினமும் பள்ளியின் தலைமை ஆசிரியர் / ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வர வேண்டும்.





No comments:

Post a Comment

LightBlog