Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, September 13, 2026

விநாயகர் சதுர்த்தி - பூஜை செய்வதற்கான நல்ல நேரம் இதோ!




ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழு மனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.

நிகழும் ஸ்ரீபராபவ வருடம், ஆவணி மாதம் 28-ம் நாள் 14.09.2026 திங்கள் கிழமை அன்று இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட நல்ல நாள்.

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய செப்டம்பர் 14, 2026 (நாளை) பகல் 11:02 மணி முதல் மதியம் 01:31 மணி வரை உள்ள மத்திம காலம் மிகச் சிறந்த நேரமாகும்


உகந்த பூஜை நேரங்கள் (செப்டம்பர் 14, 2026):

காலை நேரம்: காலை 09:10 மணி முதல் 10:20 மணி வரை

மதிய நேரம் (மத்திம காலம்): காலை 11:02 மணி முதல் மதியம் 01:31 மணி வரை (இது விநாயகர் பிரதிஷ்டை செய்து வழிபட மிகவும் உகந்தது)

பகல் நேரம்: மதியம் 01:00 மணி முதல் 02:00 மணி வரை

மாலை நேரம்: மாலை 06:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை


தவிர்க்க வேண்டிய நேரம்:

சந்திர தரிசனம்: விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சந்திராஷ்டமம் அல்லது சந்திர தரிசன தோஷம் வராமல் இருக்க செப்டம்பர் 14 அன்று காலை 09:06 மணி முதல் இரவு 08:04 மணி வரை சந்திரனை பார்ப்பதை தவிர்க்கவும். 

No comments:

Post a Comment

LightBlog