காஞ்சிபுரம் மாவட்டம் - தென்னேரி, அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) திருமதி.P.சசிகலா என்பார் அலுவலரிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்தமைக்கு விளக்கம் கோருதல் - குறிப்பானை வழங்குதல் சார்ந்து - காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!
காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பாட முதுகலை ஆசிரியராகப் பணிபுரியும் திருமதி.P.சசிகலா என்பார், 08.08.2025 அன்று மாலை சிறப்பு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, முதன்மைக் கல்வி அலுவலர் பார்வையிட சென்றார். அப்போது மேல்நிலை முதலாமாண்டு மாணவர்கள் பாடப்புத்தகம் அல்லாமல், தனியார் மூலம் தயாரிக்கப்பட்ட பாடக்குறிப்பு கையேடுகளை வைத்திருந்ததும், மாணவர்களிடம் முதன்மைக் கல்வி அலுவலர் இது குறித்து விசாரித்த போது தாங்கள் இதை மட்டுமே பின்பற்றி படித்து வருவதாக தெரிவித்தனர்.
மேலும், பள்ளி பாடவேளை நேரத்திலும், வகுப்பில் தனியர் மூலம் தயாரித்த கையேடு தான் பயன்படுத்த வேண்டுமென கூறி, இந்த கையேடு மட்டுமே ஆங்கில ஆசிரியரால் விற்கப்பட்டது, எனவே. நாங்கள் அனைவரும் இந்த கையேடு மட்டுமே பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்தனர்.
இது குறித்து ஆங்கிலப் பாட ஆசிரியரிடம் விசாரித்த போது, ஆசிரியர் உயர் அலுவலரிடம் முறையற்ற வார்த்தைகளையும், குரலை உயர்த்தி பேசியும் அவமதித்தார். மேலும், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நான்கு பாடவேளையில் அரசால் வழங்கப்படும் பாடப்புத்தகத்தை முழுமையாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க இயலாது.
எனவே தான். நான் தனியார் மூலம் தயாரித்த பாடக்குறிப்பு கையேடுகளை வைத்து கொண்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றேன் என்று கூறினார். இச்செயல், அரசின் பாடத்திட்டத்தையும், பள்ளியில் ஒதுக்கப்படும் பாடப்பிரிவு நேரத்தையும் அவமதிப்பதாக உள்ளது. இது முற்றிலும் அரசுக்கு எதிராக செயல்படும் நோக்கமாக கருதப்படுகிறது.
எனவே இதற்குண்டான விளக்கத்தினை 3 நாட்களுக்குள் அளிக்குமாறு தெரிவிக்கலாகிறது.
அவ்வாறு விளக்கம் அளிக்க தவறினால் விளக்கம் அளிக்க ஏதும் இல்லை என கருதி தங்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளின்படி துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment