தமிழகப் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 26ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 26 வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11 மற்றும் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முன்கூட்டியே செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறுவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தேர்வு நேரத்தைப்பொறுத்தவரையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை வேளையில் தேர்வுகள் நடைபெறும் எனவும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் பிற்பகல் நேரத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் முடிந்த பிறகு, செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை மொத்தம் 9 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாட்களில், அக்டோபர் 1ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது, மேலும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment