G.O 113 - மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை வெளியீடு! - Asiriyar.Net

Tuesday, July 8, 2025

G.O 113 - மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை வெளியீடு!

 





மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!


மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025- 2026 - ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு வரிசை எண் .12 - இல் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து அதனை ஏற்று , 


" பள்ளியின் சிறந்த செயல்பாடுகளை பள்ளிக்கு அருகாமையில் உள்ள பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் குடியிருப்புகளில் வசிக்கும் விளம்பரங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளின் மூலம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி விளக்கி , கடந்த ஆண்டைவிட குறைந்தபட்சம் 50 மாணவர்களைக் கூடுதலாகச் சேர்க்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க " 


அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது


Click Here to Download - G.O 113 - மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad